Thursday, October 30

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு பூஜையுடன்  கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா...
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா...

பின்னர் முளைப்பாரி எடுத்து வருதல், யாகசாலையில் வேள்வி வழிபாடுகள் சிவாச்சாரிகள் மூலம் நடத்தப்பட்து. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா...

சிவதாளங்கள் முழங்க யாகசாலையில் நான்கு கால வேள்வி வழிபாடு செய்த பின்னர் புனித நீர் குடங்களை தலையில் ஏந்தியபடி கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா...

இதைத் தொடர்ந்து நாடுகாணிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் கும்பாபிஷே விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க  ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *