300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு பூஜையுடன்  கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது.

img 20241129 wa00278806622061133082254 | 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா.<br>
img 20241129 wa00193090862880635073252 | 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா.<br>

பின்னர் முளைப்பாரி எடுத்து வருதல், யாகசாலையில் வேள்வி வழிபாடுகள் சிவாச்சாரிகள் மூலம் நடத்தப்பட்து. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது.

img 20241129 wa00246038728322675849800 | 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா.<br>

சிவதாளங்கள் முழங்க யாகசாலையில் நான்கு கால வேள்வி வழிபாடு செய்த பின்னர் புனித நீர் குடங்களை தலையில் ஏந்தியபடி கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

img 20241129 wa00232819566257549524432 | 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா.<br>

இதைத் தொடர்ந்து நாடுகாணிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் கும்பாபிஷே விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க  தீபாவளி தொடர் விடுமுறை ஆழியாறு கவியருவியில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழகத்தில் அதிகனமழை: 2229 நிவாரண முகாம்கள்  தயார் நிலை..

Fri Nov 29 , 2024
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 2229 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, 30.11.2024 அன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் […]
image editor output image 1675813852 1732874384706 | தமிழகத்தில் அதிகனமழை: 2229 நிவாரண முகாம்கள்  தயார் நிலை..