கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், மாணவ மாணவிகள் இன்று ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால், வயநாடு பகுதியில் பெரும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததால், மக்கள் துயரத்தில் மூழ்கினர். அவர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் சார்பாக, வயநாடு நிவாரண நிதியாக 1,25,000 ரூபாய் கல்லூரி முதல்வரிடம் வழங்கப்பட்டது.