Tuesday, January 14

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு கவர்னர், முதலமைச்சர் மற்றும் முக்கிய ஆளுமைகள் மரியாதை செலுத்தினர் ….

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் இன்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், பாரதி பூங்காவில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கேஎஸ்பி ரமேஷ் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவின் இறுதியில், மகாகவி பாரதியாரின் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு, அவரின் நினைவு சிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிக்க  புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *