Wednesday, October 29

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏற்றப்பட்ட தேசிய கொடி



உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் கீழரத வீதியில் உள்ள 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா நடத்தப்பட்டது.

நடராஜர் கோவிலில் முதற்கால பூஜை முடிந்த பிறகு, தேசியக் கொடியை நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர், மேளதாளங்களின் ஒலியுடன், பொது தீட்சிதர்களின் தலைமைசெயலாளர் வெங்கடேச தீட்சதரின் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வந்த கொடியை ராஜகோபுரத்தில் ஏற்றினர்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய விழாக்களில் ஆண்டிற்கு இரண்டு முறை இந்திய தேசிய கொடியை சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ்கோபுரத்தில் ஏற்றுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *