சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு…

சேலம் அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் மட்டுமே பிறந்த ஆண் குழந்தை, மாஸ்க் அணிந்த பெண்ணால் நேற்று கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தையை கடத்திய அந்த பெண், சேலம் வாழப்பாடி அருகிலுள்ள காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோதினி என அடையாளம் காணப்பட்டார்.

தனிப்படை போலீசார் விரைவாக செயல்பட்டு, கடத்தப்பட்ட குழந்தையை மீட்டனர், மேலும் குழந்தையை கடத்திய வினோதினியை கைது செய்தனர். விசாரணையில், வினோதினிக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடியதாக தெரியவந்தது.

அவர் குழந்தையை சிகிச்சைக்காக மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இதையும் படிக்க  தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி அருகே  முன் விரோதம்  காரணமாக  டூரிஸ்ட் வேன் உரிமையாளர் சுடு காட்டில் வெட்டி கொடூரமாக படுகொலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்ணின் திருமண வயது 9 ஈராக்கில் மசோதா தாக்கல்...

Sat Aug 10 , 2024
ஈராக் நாடாளுமன்றம், பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஈராக் தனிநபர் சட்டத்தின்படி, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதியமைச்சகம் இந்த சட்டத்தை மாற்றுவதற்காக புதிய மசோதாவை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா 9 வயது சிறுமிகளுக்கும் 15 வயதான ஆண் குழந்தைகளுக்கும் திருமணத்தை அனுமதிக்கிறது. இஸ்லாமிய மதச்சட்டத்தை நிலைப்படுத்தவும், தகாத உறவுகளிலிருந்து […]
images 35 - பெண்ணின் திருமண வயது 9 ஈராக்கில் மசோதா தாக்கல்...

You May Like