புதுச்சேரியில் முதியவரை மது போதையில் தாக்கிய வாலிபரை பிடித்த போக்குவரத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அருண், முருங்கப்பாக்கம் சந்திப்பில் காவல் பணியில் இருந்தபோது, ஒரு முதியவர் சாலை கடக்க முயன்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் முதியவரை மது போதையில் இடித்து கீழே தள்ளிவிட்டு சென்றார்.

இந்தச் சம்பவத்தை கண்ட காவலர் அருண், அந்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்ற போது, அவர் காவலரை ஆபாசமாக திட்டி, தாக்க முயன்றார். மேலும், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடினார்.

அருண், முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அந்த வாலிபர் தவளகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சிலம்பு செல்வம் என்று அடையாளம் காணப்பட்டது. பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றப்பதிவேடு கொண்ட சிலம்பு செல்வத்தை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க  திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் கோரிக்கை மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு கவர்னர், முதலமைச்சர் மற்றும் முக்கிய ஆளுமைகள் மரியாதை செலுத்தினர் ....

Wed Sep 11 , 2024
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் இன்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், பாரதி பூங்காவில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், திருமுருகன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கேஎஸ்பி ரமேஷ் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். […]
Screenshot 20240911 130707 WordPress - மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு கவர்னர், முதலமைச்சர் மற்றும் முக்கிய ஆளுமைகள் மரியாதை செலுத்தினர் ....

You May Like