ஹெச்.ராஜா மீது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா ராகுல் காந்தியை தேச விரோதி என்று கூறியதை கண்டித்து, திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

img 20240917 wa004636675689615167764 - ஹெச்.ராஜா மீது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகர மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையேற்றார். ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி மற்றும் திருவானைக்கோவில் கோட்ட தலைவர் தர்மேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி கண்டன உரையாற்றினார்.

img 20240917 wa00501690001763494495638 - ஹெச்.ராஜா மீது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
img 20240917 wa00478698159032997980435 - ஹெச்.ராஜா மீது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகளான பொருளாளர் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர். ராஜலிங்கம், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி ஷீலா செலஸ், மீனவரணி தனபால், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், இலக்கிய அணி பத்மநாபன், ஊடக பிரிவு செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

img 20240917 wa00499217718608602206641 - ஹெச்.ராஜா மீது திருச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்க  தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 9 வரை மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேங்காய்கள் விழுந்து சேதமடையும் ஓடுகள்: தென்னை மரம் அகற்ற கோரி வீட்டு உரிமையாளர் மனு

Wed Sep 18 , 2024
பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட விஜய்நகரில் வசிக்கும் மலர் மணி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். மனுவில், “நாங்கள் உடுமலை ரோடு, சின்னம்பாளையம், விஜயநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். மேலும், ஓடுகளால் மூடிய இரண்டு வீடுகளை கட்டி வாடகைக்கு விடுவதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்நிலையில், அருகில் உள்ள குடியிருப்பில் சுமார் 50 அடி உயரத்தில் ஒரு தென்னை மரம் உள்ளது. அந்த […]
IMG 20240918 WA0002 - தேங்காய்கள் விழுந்து சேதமடையும் ஓடுகள்: தென்னை மரம் அகற்ற கோரி வீட்டு உரிமையாளர் மனு

You May Like