திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா ராகுல் காந்தியை தேச விரோதி என்று கூறியதை கண்டித்து, திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகர மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையேற்றார். ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி மற்றும் திருவானைக்கோவில் கோட்ட தலைவர் தர்மேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி கண்டன உரையாற்றினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகளான பொருளாளர் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர். ராஜலிங்கம், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி ஷீலா செலஸ், மீனவரணி தனபால், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், இலக்கிய அணி பத்மநாபன், ஊடக பிரிவு செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Leave a Reply