திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த ஜப்பானீஸ் யென் மற்றும் யூரோ வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் இந்திய ரூபாய் மதிப்பு 10 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்.