ஜவுளி கடையில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மேற்கு ரத வீதியில்  உள்ள ஜவுளி கடையில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.  3 அடுக்குகள் கொண்ட இக்கடையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டி சென்றுள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை திடீரென பூட்டிருந்த கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கி உள்ளது. இதை அறிந்த பொதுமக்கள்,  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு  வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர், தீயை நீண்ட நேரம் போராடி அனைத்தனர்.
இருப்பினும் முதல் தளத்திலிருந்த பல லட்சம் மதிப்பிலான  ஜவுளி வகைகள் முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவிநாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க  பிரியாணி சாப்பிடும் போட்டி - கடும் போக்குவரத்து நெரிசல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மக்களை உளவு பார்க்கும் சீனா

Mon May 13 , 2024
ஒரு ஆஸ்திரேலிய ஆய்வு, சீனா உலகளவில் மக்களை ஒற்றுக் கேட்டு, பிரபலமான பயன்பாடுகள் மற்றும் கேம்களில் இருந்து தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதன் மூலம் தனது பிரச்சாரத்தை திணித்து வருவதாகக் கூறுகிறது. இந்த ஆய்வு மூன்று சீன பயன்பாடுகளை முன்னிலைப்படுத்தியது – ரைடு-ஹெலிங் ஆப் டிடி, கேமிங் ஆப் கென்ஷின் இம்பாக்ட் மற்றும் ஈ-காமர்ஸ் தளமான டீமு. “சீனா உலக தகவல் சூழலை மறுபடியும் வடிவமைக்க வெளிநாடுகளில் தனது செல்வாக்கை விரிவாக்கம் […]
1000224574 | மக்களை உளவு பார்க்கும் சீனா