மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலுள்ள காந்தி சிலைக்கும், ஸ்ரீரங்கம் காமராஜர் பவுனில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், ஸ்ரீரங்கம் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெ. ஜெயம் கோபி (எ) சுதர்சனம் தலைமையிலானது. திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். அகில் (எ) தர்மேஷ் முன்னிலையில், மூத்த தலைவர் பிச்சுமணி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பொன் தமிழரசன் மற்றும் ராமானுஜம், கோட்ட துணைத் தலைவர் செல்வி குமரன், வார்டு தலைவர்கள் பூபதி, யோகநாதன், மற்றும் வார்டு நிர்வாகி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Leave a Reply