கோவை பிரகதி மருத்துவமனையில், பல புதிய பன்முகத் துறைகள் துவங்கப்பட்டுள்ளன புதிய வசதிகளுடன் பன்முக மருத்துவ சேவையை புதிய வசதிகள் உள்ள துவக்க விழா பிரகதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிராவின் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்பித்தார்.
மருத்துவமனையில் புதியதாக தொடங்கப்பட்ட துறைகள் விபத்து & அவசரநிலை எலும்பியல் &மூட்டு மாற்று இடுப்பு மற்றும் முதுகெலும்பு சிகிச்சை பொதுமருத்துவம்
பெண்கள் மையும் குழந்தைகள் மருத்துவமனை
அதிநவீன பரிசோதனை போன்றவை அறிமுகம் செய்துள்ளது சமுதாயத்திற்கு விரிவான மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்க தயாராகியுள்ளது.
பிரகதி மருத்துவமனை, நோயாளிகளின் சேவையை மேம்படுத்துதல், கவனிப்பை உயர்த்துதல், அனைத்து வகையான சிகிச்சைகளையும் ஒரே மருத்துவமனையில் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னணி எலும்பியல் சிறப்பு மையங்களில் ஒன்றாக பிரகதி மருத்துவனை திகழ்கிறது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க, திறமையான, நிபுணத்துவமிக்க மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளனர். அதிநவீன வசதிகள் உயர்ந்த தரம்.குறைவான செலவுகள் என, சிறப்பான கவனிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிகழ்வில் மருத்துவமனை டாக்டர்கள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.