Sunday, April 27

ஸ்ரீ நாக சாயி கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை…

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாக சாயி மந்திர் சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாய்பாபாவை தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டன.

கோவில் நிர்வாகத்தின் தகவலின்படி, இந்த புத்தாண்டு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும், சாய்பாபா கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், தரிசனத்திற்காக வரும் ஒவ்வொரு பக்தருக்கும் ரூ.10 வழங்கப்பட்டது, இது பக்தர்களுக்கு மனநிறைவை அளித்தது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், பொருளாளர் டாக்டர் என். சர்வோத்தமன், மற்றும் அறங்காவலர்கள் ஜி. தியாகராஜன், எஸ். சந்திரசேகர், ஜி. சுகுமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீ நாக சாயி கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை...
 
இதையும் படிக்க  கங்கா மருத்துவமனையில் நிறுவனர் நாள் விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *