கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர், வயது உள்ளிட்ட திருத்தங்களை செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இத்துடன் தொடர்புடைய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (29.10.2024) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் பொள்ளாச்சியின் சார்ஆட்சியர் கேத்தரின் சரண்யா பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மொத்த மாவட்ட வாக்காளர்கள்:
ஆண்கள்: 15,43,073
பெண்கள்: 16,05,516
மூன்றாம் பாலினத்தவர்: 650
மொத்தம்: 31,49,239
சட்டமன்ற தொகுதிவாரியான விவரம்:
1. மேட்டுப்பாளையம் (தொகுதி 111):
ஆண்கள்: 1,48,113
பெண்கள்: 1,59,575
மூன்றாம் பாலினத்தர்: 46
மொத்தம்: 3,07,734
2. சூலூர் (தொகுதி 116):
ஆண்கள்: 1,59,893
பெண்கள்: 1,69,356
மூன்றாம் பாலினத்தர்: 95
மொத்தம்: 3,29,344
3. கவுண்டம்பாளையம் (தொகுதி 117):
ஆண்கள்: 2,37,948
பெண்கள்: 2,40,508
மூன்றாம் பாலினத்தர்: 148
மொத்தம்: 4,78,604
4. கோயம்புத்தூர் வடக்கு (தொகுதி 118):
ஆண்கள்: 1,71,469
பெண்கள்: 1,70,847
மூன்றாம் பாலினத்தர்: 37
மொத்தம்: 3,42,353
5. தொண்டாமுத்தூர் (தொகுதி 119):
ஆண்கள்: 1,67,303
பெண்கள்: 1,72,730
மூன்றாம் பாலினத்தர்: 150
மொத்தம்: 3,40,183
6. கோயம்புத்தூர் தெற்கு (தொகுதி 120):
ஆண்கள்: 1,22,186
பெண்கள்: 1,23,832
மூன்றாம் பாலினத்தர்: 35
மொத்தம்: 2,46,053
7. சிங்காநல்லூர் (தொகுதி 121):
ஆண்கள்: 1,64,858
பெண்கள்: 1,69,070
மூன்றாம் பாலினத்தர்: 27
மொத்தம்: 3,33,955
8. கிணத்துக்கடவு (தொகுதி 122):
ஆண்கள்: 1,67,728
பெண்கள்: 1,75,528
மூன்றாம் பாலினத்தர்: 45
மொத்தம்: 3,43,301
9. பொள்ளாச்சி (தொகுதி 123):
ஆண்கள்: 1,08,863
பெண்கள்: 1,19,584
மூன்றாம் பாலினத்தர்: 42
மொத்தம்: 2,28,489
10. வால்பாறை (தொகுதி 124) (தனி):
ஆண்கள்: 94,712
பெண்கள்: 1,04,436
மூன்றாம் பாலினத்தர்: 25
மொத்தம்: 1,99,173
மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.