கோவை சங்கனூர் அருகே உள்ள கிரிநாத் திருமண மண்டபத்தில் ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் பத்தாம் ஆண்டு குருபூஜை விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை முதல் ஆனந்த குருபூஜை, காயத்ரி மந்திர உபதேசம், கங்கை இராமேஸ்வர தீர்த்தம் மற்றும் ருத்ராட்ச பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வாக 1008 வலம்புரி சங்குகளுடன் 1008 ஸ்படிகலிங்கங்களை வைத்து பூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், மரகதலிங்கத்திற்கு அபிஷேகமும் பிரம்மரிஷி விசுவாமித்திரரின் உருவச் சிலைக்கு ருத்ராட்ச அபிஷேகமும் சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, விசுவாமித்திரரின் உபதேசங்கள் மற்றும் வரலாறு குறித்து நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். விழா முடிவில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.