Sunday, April 27

திருச்சி ஸ்ரீரங்கம் : பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவம்!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் தனித்துவமானது. இந்த விழா பகல் பத்து மற்றும் ராப்பத்து என மொத்தம் 21 நாட்கள் நடைபெறுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் : பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவம்!

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று, நம்பெருமாள் மாந்துளிர் நிற பட்டு மற்றும் சௌரிக் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி, தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை பிரபந்தத்திற்காக பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கலிங்கத்துராய் நெற்றி சரம், சூர்ய-சந்திர வில்லை, மகர கர்ண பத்திரம், ரத்தின அபய ஹஸ்தம், ஸ்ரீ ரங்க விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, காசு மாலை, தங்க தண்டைகள் உள்ளிட்ட அலங்காரங்களில் நம்பெருமாள் எழுந்தருளினார். கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்து, அர்ஜுன மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையும் படிக்க  போலி பாஸ்போர்ட்: திருச்சி விமான நிலையத்தில் இருவர் கைது...
திருச்சி ஸ்ரீரங்கம் : பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவம்!
திருச்சி ஸ்ரீரங்கம் : பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவம்!

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு நடைபெற உள்ளது. நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் ஜனவரி 11 முதல் 15 வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருச்சி ஸ்ரீரங்கம் : பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவம்!

சொர்க்கவாசல் திறப்புக்கு பின் ராப்பத்து திருவிழா தொடங்கும். இதில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை செய்வார். ஜனவரி 16 ஆம் தேதி திருக்கைத்தல சேவை, 17 ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, 19 ஆம் தேதி தீர்த்தவாரி, 20 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் மற்றும் இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சிகள் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

திருச்சி ஸ்ரீரங்கம் : பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவம்!

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

இதையும் படிக்க  பொங்கல் தொகுப்பு வழங்கிய மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்
திருச்சி ஸ்ரீரங்கம் : பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவம்!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *