Sunday, June 15

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் முயற்சியால் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா…

கோவையில் கடந்த 1992 ஆம் ஆண்டு கோட்டை தர்மரேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா கடைசியாக நடந்தது. அதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகளாக இந்த சித்திரை  தேர்திருவிழா நடக்கவில்லை. இந்த சித்திரை திருவிழாவை எப்படியாவது நடத்துவதற்கு ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோவையில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம் திருவிழா நடப்பதற்கு மனு ஒன்றை அளித்தனர்.

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் முயற்சியால் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா...

இதனை விசாரித்த நீதிமன்றம் அரசாங்கத்திற்கு இந்த திருவிழாவை நடப்பதற்கு அனுமதி கொடுத்தது இதன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி பாதுகாப்போடு இந்த வருடம் சித்திரை தேரோட்டம் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது. மேலும் தொடர்ந்து   பக்தர்களுக்கு ஹிந்து பாதுகாப்பு இயக்கம் சார்பாக அன்னதானம் , குளிர்பானம்,குடிநீர் மற்றும் மோர் வழங்கினர்கள் .

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் முயற்சியால் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா...

இந்த திருவிழாவில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இத்தேர் திருவிழாவில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்து கணேசன்,மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணராஜ், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் மற்றும் ஏராளமாக பக்தர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  TTV TROPHY SEASON 2 கிரிக்கெட் போட்டி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *