கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் வீரவணக்கம் நாளை முன்னிட்டு, 8 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அவருக்கு திருவுருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி கொடிக்கம்பங்களின் கீழ் நிகழ்வுகள் நடந்தன. முக்கியமாக, இராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே மாபெரும் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர் K. தசரதன் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் S. சதீஷ், கோட்டச் செயலாளர் பாபா ஆ. கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் M. ஜெய் சங்கர், கோட்ட பொறுப்பாளர் மு. லீலாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் J. S. கிஷோர் குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்புரையில், சசிகுமாரின் உயிர்த்தியாகம் மற்றும் பயங்கரவாதிகளால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து விவரிக்கபட்டு, தமிழகத்தில் தற்போது பயங்கரவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டார். உளவுத்துறை மற்றும் காவல்துறை இதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் எனவும், இனி பயங்கரவாதம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வில், மாவட்டச் செயலாளர்கள் M. கிருஷ்ணா, K. ஆறுச்சாமி, K. மகேஷ்வரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் C. தனபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவனேஸ்வரன் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட இந்து முன்னணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Leave a Reply