Sunday, April 27

கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

கோவை:சர்வதேச சட்ட உரிமைகள், உடல் உறுப்பு தானம் மற்றும் விழிப்புணர்வு பேரணி கோவையில் மகளிர் பாலிடெக்னிக் முதல் ஆர்.கே ஸ்ரீரங்கம்மாள் பள்ளி வரை காலை 8.00 மணிக்கு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையின் சர்வதேச தலைவர் திரு. T.N. வள்ளிநாயகம், சர்வதேச துணைத்தலைவர் Rtn. AKRFC. Dr. லீமா ரோஸ் மார்ட்டின், மற்றும் கோயம்புத்தூர் மனிதவள மேம்பாட்டு வட்டத்தின் நிறுவனர் தலைவர், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) கோயம்புத்தூர் மண்டல HR & IR குழு மற்றும் பயிற்சி மற்றும் கல்வி குழு உறுப்பினர், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் இயக்குனர் டாக்டர் கவிதாசன் ஆகியோர் இணைந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் கே.என். சிவானந்தன், தனது மரணத்திற்கு முன்பே, கல்லூரிக்கு எழுதிய கடிதத்தில் தனது உடலை கல்லூரிக்கும் அதன் மாணவர்களுக்கும் கல்விக்காக தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்.

மேலும், லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள், 8 வருடங்களுக்கு முன்பு, தனது மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான மற்றும் உடல் உறுப்பு தான முகாமில் தன்னுடைய இரண்டு கண்களையும் தானமாக வழங்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், தன்னுடைய இரண்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரலை தானம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிக்க  பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு ICMR தடை
கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *