Chttp://சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில், அரக்கோணத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒற்றை கண் ஜெய் பால் மற்றும் நெல்லை கூலிப்படை ரவுடிகள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் உதவியதாக ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதினர், இதனால் ஆம்ஸ்ட்ராங் மீது அவர்களின் கோபம் அதிகரித்தது.
அந்த நிலையில், கடந்த மாதம் 5-ந் தேதி, ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளன்று, சென்னையின் பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாகவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது என்று பொன்னி பாலுவுடன் கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நாளை, ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் தரப்பை சேர்ந்தவர்கள் புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதால், முன்னெச்சரிக்கையாக, இந்த பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்கிறார்கள்.
Leave a Reply