கோவையில் HUDCO சார்பில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி சாதனங்கள்

IMG 20240924 WA0026 - கோவையில் HUDCO சார்பில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி சாதனங்கள்

கோவை சிங்காநல்லூரில் மத்திய அரசின் HUDCO நிறுவனத்தின் CSR முயற்சியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு (திவ்யாங்கர்கள்) நவீன உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த முகாமில், மொத்தம் 66 பயனாளிகளுக்கு 102 உதவி சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

img 20240924 wa00272772984295189911503 1 - கோவையில் HUDCO சார்பில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி சாதனங்கள்

இந்த நிகழ்ச்சி, இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம் (ALIMCO) சார்பில் நட்சத்திர சிறப்புப் பள்ளியில் நடைபெற்றது. வழங்கப்பட்ட உதவி சாதனங்களில் 14 சக்கர நாற்காலிகள், 3 முச்சக்கரவண்டிகள், 10 ஊன்றுகோல்கள், 9 ரோலேட்டர்கள், 11 சிபி நாற்காலிகள், 6 பிரெய்லி ஸ்லேட்டுகள், 1 பிரெய்லி கேன், 5 பிரெய்லி கிட்கள், 1 சுகம்யா கேன் மற்றும் 28 பிடிஇ காதுகேட்பு சாதனங்கள் அடங்கும்.

இந்த உதவிகள், HUDCOவின் CSR முயற்சியின் கீழ் சுமார் 5.38 லட்சம் ரூபாய் மதிப்பிலானதாகும். 2024 பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மதிப்பீட்டு முகாம்கள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் HUDCO நிறுவனத்தின் இயக்குனர் திருமதி சபிதா போஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.

img 20240924 wa00283042224817273114773 - கோவையில் HUDCO சார்பில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி சாதனங்கள்
இதையும் படிக்க  ஹோட்டல் உரிமையாளரை சிவில் அடிக்க பாய்ந்த சப்-இன்ஸ்பெக்டர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *