கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க அரசாணை 33ல் திருத்தம் செய்திட வலியுறுத்தியும் ஓய்வு பெறும் கிராம உதவியாளர்களுக்கு CPS இறுதித்தொகை வழங்குவது தொடர்பாக நிலுவையில் உள்ள கோப்பு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில தணிக்கையாளர் கண்ணன் முன்னிலை வைத்தார் மாவட்ட செயலாளர் அப்துல் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெய பிரகாஷ் துவக்க உரை நிகழ்த்தினார் பொதுச் செயலாளர் பாண்டியன் மாநில பொருளாளர் நாகப்பன் ஆகியோர் அறிக்கை குறித்து உரை நிகழ்த்தினார்கள் மாநில தணிக்கையாளர் செந்தில்குமார் வாழ்த்துரை நிகழ்த்தினார் TNRVAA நிறுவனத் தலைவர் தமிழ்ச்செல்வன் நிறைவுறை ஆற்றினார் மாவட்டத் தலைவர் சேவகமூர்த்தி நன்றி உரை நிகழ்த்தினார் மேலும் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.