புகாருக்கு நடவடிக்கை இல்லை: காவல் நிலையம் முன்பு பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…

புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு பெண் தன் பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பெத்தாச்சி குடியிருப்பத்தைச் சேர்ந்தவர் உடையப்பன் இவரது மனைவி லதா இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது இந்நிலையில் உடையப்பன் அண்ணன் மகன் பிரசாத் திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் வேறொரு திருமணம் செய்யப் போவதாக அவரது மனைவியை அடித்து துன்புறுத்தியதை பிரசாத்தின் சித்தப்பாவான உடையப்பன் தட்டிக் கேட்டுள்ளார் இதனால் கோபமடைந்த பிரசாத் தனது சித்தப்பா சித்தி மற்றும் தனது இரு தங்கைகளிடம்  ஆபாசமாக பேசி சண்டையிட்டு வந்துள்ளார்.

img 20241130 1930567916812351679094058 | புகாருக்கு நடவடிக்கை இல்லை: காவல் நிலையம் முன்பு பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி...

இதுகுறித்து உடையப்பன் சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை  இந்நிலையில் பிரசாத் அவரது வைக்கோல் போரில் அவரே தீவைத்துக் கொண்டு தனது சித்தப்பா தீ  வைத்து விட்டதாகவும் அவரது மாட்டை  ஒளித்து வைத்துவிட்டு மாட்டை தனது சித்தப்பா உடையப்பன் திருடிவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க  முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இதனால் மன உளைச்சல் அடைந்த உடையப்பன் குடும்பத்தினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து உடையப்பன் மனைவி லதா மகள் பாண்டி மீனாள் ஆகியோர் சாக்கோட்டை காவல் நிலையம் முன்பு பெட்ரோல் கேனுடன் வந்து பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் இதைக் கண்ட காவல்துறையினர் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையமாக அழைத்துச் சென்று சமாதானம் செய்தனர் அதன் பின்பு பிரசாத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரை கண்டித்து காவல் நிலையம் முன்புபெண் தன் தனது பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குரங்குகளின் அட்டகாசம்: மின்சாரம் தாக்கி இரண்டு உயிர்கள் பலி, அச்சத்தில் சிக்கிய கிராமம்

Sat Nov 30 , 2024
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக 50க்கும் மேற்பட்ட குரங்குகள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளையும் மற்றும் வீட்டு தோட்டங்களில் வளர்க்கும் கொய்யா நெல்லி மா சப்போட்டா போன்ற பழங்களையும் தென்னை மரங்களில் காய்த்து குலுங்கும் தேங்காய்களையும் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தெருவில் விளையாடும் சிறுவர்களையும் அவ்வப்போது காயப்படுத்தியும் வருகிறது. இதனால் கிராம மக்களுக்கு குரங்குகளின்அட்டகாசம் ஒவ்வொரு நாளும் […]
IMG 20241130 193350 | குரங்குகளின் அட்டகாசம்: மின்சாரம் தாக்கி இரண்டு உயிர்கள் பலி, அச்சத்தில் சிக்கிய கிராமம்