
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை மழுக்குப்பாறை பகுதியில் வனப்பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த யானைகள் கூட்டம் தேயிலை தோட்ட பணியாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ராஜகுமாரி என்பவர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது புதிரில் இருந்து வெளியேறிய காட்டு யானை ராஜகுமாரியை தந்ததால் குத்தி தாக்கியதில் பலத்த காயமடைந்தார் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.