மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு  ஊருக்குள் வந்த சிறுத்தை, ஐயப்பன் என்பவா் வீட்டில் வளா்த்து வந்த ஆட்டை தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது ஆட்டை விட்டுவிட்டு அங்கு நின்ற நாயை தூக்கிச் சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், பாபநாசம் வனச்சரகா் சத்யவேல் தலைமையில் வனத்துறையினா் பாா்வையிட்டனா். தொடா்ந்து வனத்துறையினா், வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தையும், அகஸ்தியா்பட்டி, பசுக்கிடைவிளை பகுதிகளில் கரடி நடமாட்டத்தையும் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனா்.இந்த நிலையில், வேம்பையாபுரத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த  சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை கோதையாறு வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க  "தீபாவளியில் பட்டாசு வெடிப்பு: நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

க்ரீன் டீ குடிப்பதன் நன்மைகள்!

Sat May 18 , 2024
கிரீன் டீ ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். இதில் ஆண்டிஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கிரீன் டீயில் கலோரிகள் மற்றும் சர்க்கரை இல்லாததால் மனித உடலுக்கு அதிக ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது. இந்த டீயில் கேட்டசின்கள் எனப்படும் தாவர மூலக்கூறுகள் இருப்பதால் அதிகபட்ச நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியுள்ளது. Post Views: 124 இதையும் படிக்க  புதுக்கோட்டை அருகே மர்ம பை -அதிர்ச்சியடைந்த காவல்துறை ?
Screenshot 20240518 095814 inshorts - க்ரீன் டீ குடிப்பதன் நன்மைகள்!

You May Like