Thursday, October 30

ஆழியார் ஆற்றில் மூழ்கி 3 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு

கோவை மாவட்டம் ஆழியார் ஆற்றில் நீராடிய போது மூழ்கி மூன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. உயிரிழந்த மாணவர்கள் மூவரும் சென்னைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சுற்றுலா நோக்கில் கோவைக்கு வந்திருந்த மாணவர்கள், இன்று நண்பர்களுடன் ஆழியார் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நீரின் ஓட்டத்தில் சிக்கி மூழ்கினர். அவர்களை மீட்பதற்காக மற்ற நண்பர்கள் முயற்சி செய்த போதும், தருண், ரேவந்த் மற்றும் ஆண்டோ ஜெனிப் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வால் பெரும் சோகமடைந்த மாணவர்களின் நண்பர்கள், உடனடியாக தகவலை போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை இளமையிலேயே இழந்த சம்பவம், அவரது பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க  கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம்: பொதுமக்களின் குறைகள் நீக்க நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *