Thursday, October 30

100 ரேசன் கடைகள் முன்பு 100 நாட்கள் போராட்டம்…

பொள்ளாச்சியை அடுத்த மண்ணூர் ராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் அறிவித்த 100 நாட்கள் 100 ரேஷன் கடைகளில் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 ரேசன் கடைகள் முன்பு 100 நாட்கள் போராட்டம்...
100 ரேசன் கடைகள் முன்பு 100 நாட்கள் போராட்டம்...

உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்வதை தடை செய்ய கோரியும், உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணையை முழுமையாக கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன் கடை மற்றும் சத்துணவு கூடங்களில் வினியோகிக்க கோரி அரசை வலியுறுத்தியும், கள் இறக்க போடப்பட்டுள்ள தடையை நீக்க கோரியும்,வேளாண் பம்பு செட்டுகளுக்கு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மும்முனை மின்சாரத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும், பிஏபி பாசன திட்டத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் எதிர்வரும் நிதிநிலை அறிக்கையின் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வற்புறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

 
இதையும் படிக்க  திருச்சியில் புதிய பேருந்து சேவை துவக்கம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *