விராட் கோலிக்கு ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருது – 4வது முறையாக!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 35 வயதான கோலி, கடந்த ஆண்டு மொத்தம் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 72.47 என்ற சராசரியுடன், 99.13 ஸ்ட்ரைக்ரேட்டில் 1,377 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும், 8 அரைசதங்களும் அடங்கும். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற கோலி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் 765 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக அசத்தியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோலிக்கு ‘ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  "பென்காட் சிலாட்: தமிழக வீரர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புனே கார் விபத்து தொடர்பாக 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைப்பு.....

Sun Jun 2 , 2024
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மே 19-ஆம் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதி இரு தகவல் தொழில்நுட்ப (IT)  பணியாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்வினி கோஸ்தா (24) மற்றும் அனீஷ் அவாதியா (24) என்று விசாரணையில் தெரியவந்தது.கார் ஓட்டிய சிறுவன் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் அரசு மருத்துவர்கள் […]
1716291653 1317 - புனே கார் விபத்து தொடர்பாக 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைப்பு.....

You May Like