
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 35 வயதான கோலி, கடந்த ஆண்டு மொத்தம் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 72.47 என்ற சராசரியுடன், 99.13 ஸ்ட்ரைக்ரேட்டில் 1,377 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும், 8 அரைசதங்களும் அடங்கும். ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற கோலி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் 765 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக அசத்தியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோலிக்கு ‘ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.