உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது நியூசிலாந்து அணி!

- உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது நியூசிலாந்து அணி!

உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் உலகக் கோப்பை லீக் சுற்றுடன் நியூசிலாந்து அணி வெளியேறியது.குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள உகாண்டா, பப்புவா நியூ கினியா மற்றும் நியூசிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.லீக் சுற்றில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, இரண்டிலும் தோல்வியை தழுவியது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
மொத்தமுள்ள 4 குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  2024 T20:உலகக் கோப்பைக்கான  அதிகாரிகள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *