திருச்சியில் 5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி…

IMG 20240901 WA0018 - திருச்சியில் 5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி...

ரோல் பால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, தென்னிந்திய ரோல் பால் அசோசியேஷன், தமிழ்நாடு ரோல் பால் விளையாட்டு சங்கம், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய் ஜி ரோல் பால் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் 5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, திருச்சியில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.

img 20240901 wa00213407313437000149890 - திருச்சியில் 5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி...
நேற்று நடைபெற்ற துவக்க விழாவில், தமிழ்நாடு ரோல் பால் விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மதுரை ரோல் பால் சங்கத்தின் தலைவர் ராபின் ராஜகாந்தன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தென்னிந்திய ரோல் பால் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், வேலம்மாள் போதி வளாக முதல்வர் சகானா ராஜ்குமார், மற்றும் நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியை துவக்கி வைத்த இருதயராஜ் எம்.எல்.ஏ, இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மற்றும் அந்தமான் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகள் ‘லீக்’ முறையில் நடத்தப்படுகின்றன, மொத்தம் 16 சுற்றுகள் நடைபெறும்.

இதையும் படிக்க  17 வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024

நேற்று மாலை நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில், தமிழக அணி புதுச்சேரியை எதிர்கொண்டு விளையாடியது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய தமிழக அணி, 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts