மும்பை அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்றுள்ளது. ரஹானே தலைமையிலான மும்பை அணி, ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியுடன் மோதியது.
முதலில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 416 ரன்கள் எடுத்தது, அதனை தொடர்ந்து மும்பை 537 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.
5 நாள் போட்டி டிராவாக முடிந்தது, ஆனால் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தனுஷ் கோடியான் கடைசி இன்னிங்ஸில் சதம் அடித்து ஆட்டத்தை சிறப்பித்தார்.
மும்பையின் 15ஆவது கோப்பையாகவும், 1997-1998ன் பிறகு வென்றதும் குறிப்பிடத்தக்கது.
சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம் அடித்ததிற்காக ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.