உக்கடத்தில் புதிய விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 86வது வார்டின் உக்கடம் புல்லுக்காடு பகுதியில், சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையத்துக்கு அருகில் புதியதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் படி தலைமையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

img 20240925 wa00235823388350223888555 - உக்கடத்தில் புதிய விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு
img 20240925 wa00221713989179096623981 - உக்கடத்தில் புதிய விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு

இந்நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமதுகபீர், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பசுமை குழுவைச் சேர்ந்த ஓசை செய்யது, டிஎம்எம்கே மாநில செயலாளர் சாகுல் ஹமீது, மாநில பிரதிநிதிகள் சுல்தான் அமீர், அக்பர் அலி, மாவட்ட தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், துணைத்தலைவர் அபாஸ், துணைச் செயலாளர்கள் நூர்தீன், அசாருதீன், பைசல் ரகுமான், அபு, ஆஷிக் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  CSK அபார வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆவணங்களின்றி கனிம வளங்கள் எடுத்துச் சென்ற 4 லாரிகள் பறிமுதல்!

Wed Sep 25 , 2024
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கேரளாவிற்கு கனிம வளங்களை எடுத்துச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக 3.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து அரசுக்கு வரி செலுத்தாமல், ஆவணங்களின்றி, அரசு நிர்ணயித்த அளவுக்குஇள அதிகமாக கனிம வளங்களை எடுத்துச் செல்வதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து, சென்னை போக்குவரத்து இணை ஆணையர் […]
IMG 20240925 WA0043 - ஆவணங்களின்றி கனிம வளங்கள் எடுத்துச் சென்ற 4 லாரிகள் பறிமுதல்!

You May Like