பொள்ளாச்சி அருகே கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் சாதிக்கும் பெத்தநாயக்கனூர் அரசு பள்ளி மாணவர்கள்…
கல்வி என்பது பாட புத்தகங்களில் மட்டும் இல்லை கலையும் விளையாட்டும் சேர்ந்ததுதான் முழுமையான கல்வியாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் பொள்ளாச்சி அடுத்துள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டுப்புற கலைகளில் சாதிப்பது போலவே விளையாட்டிலும் சாதித்து வருகின்றனர்.
கோட்டூர் குறுவள மையத்தின் சார்பாக நடைபெற்ற எறிபந்து போட்டிகளில் மாணவர் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான போட்டிகளில் கலந்து கொண்டு மண்டல அளவில் முதலிடம் பிடித்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளுக்குத் தேர்வாகி உள்ளனர். தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்த போதும் மாணவர்களின் தொடர் முயற்சி, முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் பெற்று இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர். மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை தமிழாசிரியர் பாலமுருகன் செய்து கொடுத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி வாழ்த்துக்களை கூறினார்.
Leave a Reply