பொள்ளாச்சியில், குடும்ப நிலை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்கள் மீண்டும் உயர்கல்வியை தொடர விரும்பினால், சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்துங்கள் என்று நகரமன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் “நான் முதல்வன்” உயர்கல்வி வழிகாட்டல் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திலும் வரும் திங்கட்கிழமை (16.09.2024) பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், இடைநின்று விட்டவர்கள், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் பட்டப்படிப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகளை மீண்டும் தொடங்கலாம். மாணவர்கள் தாங்கள் விரும்பும் பிரிவில் சேர்ந்து உயர்கல்வியை தொடர இது ஒரு அரிய வாய்ப்பு.
நகரத்தின் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்ய, நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு முகாமில் சேர வேண்டும். இந்த அழைப்பை, நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் கணேசன், மற்றும் நகரமன்ற துணை தலைவர் கெளதமன் வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply