Thursday, October 30

கோவையில் நடைபெற்ற 27வது ஜே.கே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன் போட்டி

கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் 27-ஆவது ஜேகே டயர் தேசிய கார் பந்தயத்தின் இறுதிச் சுற்று நடைபெற்றது. ஏற்கனவே அதிக புள்ளிகளைப் பெற் றிருந்த பெங்களூரைச் சேர்ந்த இளம் வீரர் திஜில் ராவ் இறுதிச் சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

கோவையில் நடைபெற்ற 27வது ஜே.கே டயர் தேசிய கார் பந்தய சாம்பியன் போட்டி

இறுதிச் சுற்றை திஜில் ராவ் 21:25 நிமிஷங்களில் நிறைவு செய்து பட்டத்தை வென்றார். எல்ஜிபி ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக 87 புள்ளிகளுடன் திஜில் ராவ் முதல் இடத்திலும், 45 புள்ளிக ளுடன் பால பிரசாத் 2வது இடத்திலும், 44 புள்ளிகளுடன் மெஹுல் அகர்வால் 3வது இடத்திலும், 43 புள்ளிகளுடன் கோவையைச் சேர்ந்த சரண் 4வது இடத்திலும் உள்ளனர்.அதேபோல ஜேகே டயர் ராயல் என்பீல்டு கான்டினென் டல் ஜிடி கோப்பைக்கான போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த நவநீத்குமார் 10 சுற்றுகளை 13:01 நிமிஷங்களில் கடந்து முதலிடம் பிடித்தார்.

இவரைத் தொடர்ந்து அனிஷ் ஷெட்டி 2-ஆவது இடத்தையும், மன்வித் ரெட்டி 3-ஆம் இடத் தையும் பிடித்தனர்.

இதையும் படிக்க  New boys won the championship with glory

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *