Wednesday, January 29

உருளையன்பேட்டையில் தங்கும் விடுதி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்எல்ஏ நேரு

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே தங்கும் விடுதி அமைப்பதற்கு அனுமதி வழங்கியதை, தொகுதி எம்எல்ஏ நேரு எதிர்த்து கருத்து தெரிவித்தார்.

உருளையன்பேட்டை அம்மன் கோவில் வீதியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் தங்கும் விடுதி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் விடுதி அமைப்பால் அவர்கள் அமைதி பாதிக்கப்படும் எனக் கூறி, அப்பகுதி மக்கள் அந்த கட்டடத்தை முற்றுகையிட்டனர். இதைக் கண்டு, எம்எல்ஏ நேரு அங்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் உருளையன்பேட்டை காவல் ஆய்வாளரிடம் மக்களின் வருத்தத்தை தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் விடுதிக்கு அனுமதி அளிக்க எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை பரிசீலிக்கவுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிக்க  திராவிடம் குறித்துப் பேசுவதை நிறுத்தும் வரை பெரியார் குறித்து தொடர்ந்து பேசுவேன் :சீமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *