புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பள்ளி மாணவர் பட்டா கத்தியுடன் பள்ளி வகுப்பறையில் ரீல்ஸ் செய்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது



புதுச்சேரி கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் என்ற பெயரில் பல்வேறு தவறான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்
லாஸ்பேட்டை  அரசு பள்ளியில்  வகுப்பறையில் மாணவர்கள் மதுபானம் அருந்தினர். இது தொடர்பாக கல்வித்துறை விசாரணை நடத்தி, சில மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது.
இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் லாஸ்பேட்டை ஜேடிஎஸ் அரசு பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் ஐந்து பேர்  வகுப்பறையில்  கும்பலாக நிற்பதும், அதில் ஒரு மாணவர் தான் எடுத்து வந்த பட்டாகத்தியை மேஜையின் மீது குத்தி  நிறுத்தி வைத்துள்ள புகைப்படத்துடன், பின்னணியில் கானா பாடல் ஓடும்  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் கஞ்சா, நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பட்டா கத்தியுடன் நிற்கும் வீடியோ ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் புதுச்சேரி நெல்லிதோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்யும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது புதுச்சேரியை பொருத்தவரை தற்பொழுது பள்ளி மாணவர்களிடையே ரீல்ஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கின செயலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை புதுச்சேரி கல்வித்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு பள்ளிகளில் செல்போன் கொண்டுவர தடை விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.

Wed Jul 17 , 2024
ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 25-க்கும் மேற்பட்டோர் இன்று (புதன்கிழமை) காலை பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் […]
IMG 20240717 WA0000 | சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.