புதுச்சேரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 10 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வேல்ராம்பட் ஏரிக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, நம்பர் பிளேட் இல்லாமல் பைக்கில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வில்லியனூர் மோகன் பிரசாத் (18), தட்டாஞ்சாவடி ஷாத்ரி (19), வி.மணவெளி நீலமணிகண்டன் (20) ஆகியோர் திருட்டு பைக்குகளை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் திருடி மறைத்து வைத்திருந்த 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், உருளையன்பேட்டை போலீசார் வாகன சோதனையில் சந்தேகத்திற்கிடமாக வந்த மாளிகைமேடு அரவிந்த் (25) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரங்களில் 14 பைக்குகளை திருடியதாக ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.