பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது, பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுகவை சேர்ந்த பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பேரூராட்சியின் தலைவர் ராமகிருஷ்ணன் தன்னிசையாக செயல்பட்டு ஊழல் செய்து வருவதாக கூறியும் ,சரியான முறையில் வரவு செலவு கணக்குகள் காட்டுவதில்லை, பேரூராட்சிக்கு மக்கள் நல பணிகளுக்காக அரசு ஒதுக்கும் நிதியில் ஊழல் செய்வதாகவும் கூறி திமுக பேரூராட்சித் தலைவரை கண்டித்து திமுக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தனர். இதனால் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் வரி என்கின்ற பெயரில் அதிகமாக வசூல் செய்து குறைவாக கணக்கு காட்டுவதாகவும் ,அரசு கொடுக்கும் நிதியை முறைகேடாக பயன்படுத்தி ஊழல் செய்வதாகவும், எனவே இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எனவே பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக திமுக வார்டு கவுன்சிலர்களே தெரிவித்தனர்.