
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான நிகழ்வுகளை தடுத்து நிறுத்துதல் மற்றும் கையாளுதல் தொடர்பான கூட்டம் தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் நடத்தப்படவுள்ளது. காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கலை மற்றும் அறிவியியல், பொறியியல், மேலாண்மை, சட்டம், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அனைத்து தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் நாளை திங்கட்கிழமை (02.09.2024) மதியம் 03.00 மணியளவில் தமிழக அரசு தலைமைச் செயலாளரால் நடத்தப்படுகிறது எனவே காணொளிக் கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.