Friday, June 27

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சர்வ மத பிரார்த்தனை…

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சர்வ மத பிரார்த்தனையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் விழா கோவையில் நடைபெற்றது..

சர்வ மத பிரார்த்தனையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னதாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் கோவிலி்ல் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..

இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப் பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் ஆன எம்.என்.கந்தசாமி,கோவை செல்வன்,பச்சை மூத்த ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சௌந்தர குமார்,மகேஷ் குமார் கவுன்சிலர் சங்கர் , ஷோபனா செல்வன், பேரூர் திருமூர்த்தி, கருணாகரன், ஜெர்ரி லூயிஸ், பாலச்சந்தர், ரமேஷ், ஜோதி முத்துக்குமார், கருடா பாலு, ஸ்ரீதரன், வக்கீல் செந்தில், ஆர்கே ரவி, பார்த்திபன், குணா, வீரா ராம்குமார், டென்னிஸ் செல்வராஜ், அர்ச்சனா மோகன், சிறில், காசிமேடு குமார், காமராஜ் துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க  பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பாா் - பெரம்பலூர் பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு!

பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக உக்கடத்தில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *