பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்!

images 3 - பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்!


ந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், முன்னாள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மக்களுக்கு செய்த நற்பணிகள்!

ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, சாதாரண ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ளவர் டாக்டர் பாரிவேந்தர். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெரம்பலூர் தொகுதிக்கு பல நன்மைகளை செய்துள்ளார். ஒரு எம்பியாக மட்டுமின்றி ஒரு தனிமனிதராக தனது சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். அதில் சிலவற்றை இங்கு காண்போம்.


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 100 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினிகளைத் தமது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளார் பாரிவேந்தர். ஏழ்மை நிலையால் உயர்கல்விப் படிக்க இயலாமல் ஒப்பந்த அடிப்படையில் சாலைப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் கடலூர் மாவட்டம் வி.சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சத்யாதேவி. இந்த மாணவிக்கு எஸ்.ஆர்.எம் கல்லூரியில் வேளாண் உயர்கல்வியும், தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்கு கட்டணமில்லாமல் வழங்கியிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பாரிவேந்தரின் பிறந்தநாளின்போது, 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்விக் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முசிறி பகுதி வேளாண்குடி மக்களின் பல்லாண்டு காலக் கோரிக்கையான கொரம்பு எனும் நீர் தடுப்பு அமைப்பு அமைப்பதற்கு நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வழிவகை செய்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க, எஸ்.ஆர்.எம் அறக்கட்டளையில் இருந்து மக்களுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கியிருக்கிறார். இதன் மூலம் உடும்பியம், அன்னமங்கலம், திருவாலந்துறை, நூத்தப்பூர், பெரிய வடகரை, சாத்தனூர் உள்ளிட்ட 10 கிராமங்கள் பயனடைகின்றன.
பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட மூன்று கிராமங்களுக்குத் தனது சொந்தப் பணத்தில் இருந்து போர்வெல் அமைத்துக் கொடுத்திருக்கிறார் பாரிவேந்தர். தொட்டியம் – நத்தம் கிராமத்தில் ரூ.3 லட்சத்தில் மயானம் செல்வதற்குச் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார். மேலும் பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2020-ஆம் ஆண்டு ஏற்பட்டக் கடும் வறட்சியின் போது குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க தமது சொந்த செலவில் இருந்து லாரிகள் மூலம் தேவைப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்கினார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் டயர் வெடித்து கிணற்றுக்குள் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமது சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கி, அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.
கொரோனா காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 11 பேர் அயல்நாட்டில் பணியிழந்து தாயகம் திரும்ப இயலாமல் தவித்தனர். அப்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பத்திரமாக தாயகம் திரும்ப வழிவகை செய்தார். வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்று, அங்கு எதிர்பாராவிதமாக மரணமடைந்த 6 பேரின் உடல்களை வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாட்டுத் தூதரகம் மூலம் குடும்பத்தாரிடம் சேர்க்க வழிவகை செய்தவர்.

பொருளாதாரப் பற்றாக்குறையால் மருத்துவம் பெற இயலாமல் உயிரிழக்கும் ஏழை மக்களைக் காக்கும் பொருட்டு, பிரதமர் உதவித் தொகை மூலம் நோய்வாய்ப்பட்ட ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெற, பிரதமருக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர்வரை 40-க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள் ஒவ்வொருவரும் ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர்தரமான கட்டணமில்லா மருத்துவம் பெற ஏற்பாடு செய்தவர் பாரிவேந்தர்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் தாம் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டுக்கு 300 மாணவர்கள் வீதம் தொடர்ந்து 4 ஆண்டுகள் 1,200 மாணவ மாணவியர்களுக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கட்டணமில்லா உயர் கல்வி வழங்கி வருகிறார் பாரிவேந்தர்.
50 ஆண்டு கால கனவுத் திட்டமான அரியலூர் – பெரம்பலூர்- துறையூர்- நாமக்கல் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்றுவரை பிரதமர், நிதியமைச்சர், ரெயில்வே அமைச்சர் என அனைவரையும் சந்தித்து திட்டம் செயல்பட வலியுறுத்தினார். இதையடுத்து புதிய ரெயில் தடம் அமைப்பதற்கான சர்வே மேற்கொள்ளப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்தது.
இவ்வாறு அரசு மூலமாகவும், தனது தனிப்பட்ட முறையிலும் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார் பாரிவேந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *