திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் கருப்பையா போட்டியிடுகிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கருப்பையா என்று திருச்சி பீம நகர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி பீமா நகர் பகுதியில் உள்ள செடல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த கருப்பையா தொடர்ந்து அப்பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் வளர்மதி, முன்னாள் எம்பி ரத்தினவேல்,ப. குமார், முன்னாள் அரசு கொறடா மனோகரன், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்
Leave a Reply