தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அக்.29-ம் தேதி தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார். வாக்குச்சாவடிகளில் நவம்பர் 9,10, 23,24 ஆகிய நான்கு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
2025ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட சரிபார்ப்பு வேலைகள் ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
அக்.29 முதல் நவ.28 வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர்கள், தேவையான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்காக நவ.9,10, 23,24 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 69,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
விண்ணப்பங்களை https://voters.eci.gov.in/https://voters.eci.gov.in/ அல்லது ‘VOTER HELPLINE’ கைபேசி செயலியின் மூலமும் சமர்ப்பிக்கலாம்.