வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு தொடா்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சன்ஜா மியன் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி..நட்டா மற்றும் பல தலைவர்கள் முன்னிலையில் முக்டோவின் எம்.எல்.ஏ.வான காண்டுவுக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், பெமா காண்டு இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.