முதுகலை படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை ஐஐடி மெட்ராஸ் உயர்த்தியுள்ளது.இது புதிய எம்டெக், எம்எஸ்சி மற்றும் எம்ஏ மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்றும் மேலும்,எம். டெக் படிப்புக்கான கட்டணம் 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், எம். ஏ. படிப்புக்கான கட்டணம் 5,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், எம். எஸ்சி படிப்புக்கான கட்டணம் 3,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மீதான சுமை மற்றும் மாறாத உதவித்தொகை திட்டப்பணம் ஆகியவற்றைக் காரணம் காட்டி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.