பொள்ளாச்சியில் தீ இனிது இலக்கிய இயக்கம் நூல் அறிமுக விழா…

தீ இனிது இலக்கிய இயக்கம் மற்றும் களிறு வெளியீடு சார்பில், பொள்ளாச்சி பர்வானா அரங்கில் நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் எட்டு வயது எழுத்தாளர் யோகேஸ்வரன் எழுதிய “கஜராஜன் கலீம் தாத்தா”, தாய்நதியின் “ஐந்திணைச் சொற்கள்” மற்றும் சாய் மீராவின் “நீலச்சிறகு” ஆகிய நூல்களின் அறிமுக உரைகள் வழங்கப்பட்டன. அறிமுக உரையை ஜி.சிவக்குமார், கோகலியமூர்த்தி, மற்றும் கருக்கல் சுரேஷ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

img 20240829 wa00005581112325203506568 - பொள்ளாச்சியில் தீ இனிது இலக்கிய இயக்கம் நூல் அறிமுக விழா...

நிகழ்வில் பாரதி மற்றும் பாரதிதாசன் கவிதைகள் பாடப்பட்டன. கவிஞர் நதிமலர் உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர். யோகேஸ்வரன், “நொய்யல்.. ஆறும் ஆறாத ரணமும்” எனும் தனிநபர் நாடகத்தை நிகழ்த்தினார். இளவேனில் இளங்கோவன் மற்றும் பள்ளி மாணவியர் சிலம்பாட்டத்தை ஆடிக்காட்டினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தீ இனிது அமைப்பின் கவிஞர் சோழநிலா வரவேற்புரையையும், பசுமைக்குரல் அமைப்பின் மகேந்திரன் நன்றியுரையையும் வழங்கினர்.

கலை மற்றும் இலக்கியம் என்பது படைப்புகளையும் படைப்பாளிகளையும் கொண்டாட வேண்டும், நவீன கால சூழலுக்கு ஏற்ப புதிய படைப்புகள் அவசியம் என்று பல்வேறு கருத்துக்கள் நிகழ்வில் பகிரப்பட்டன.

இதையும் படிக்க  அனைத்து குடிமக்களுக்கும் தினசரி சிரிப்பு.......

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெத்தநாயக்கனூர் பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை...

Thu Aug 29 , 2024
பொள்ளாச்சி அருகே கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் சாதிக்கும் பெத்தநாயக்கனூர் அரசு பள்ளி மாணவர்கள்… கல்வி என்பது பாட புத்தகங்களில் மட்டும் இல்லை கலையும் விளையாட்டும் சேர்ந்ததுதான் முழுமையான கல்வியாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் பொள்ளாச்சி அடுத்துள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டுப்புற கலைகளில் சாதிப்பது போலவே விளையாட்டிலும் சாதித்து வருகின்றனர். கோட்டூர் குறுவள மையத்தின் சார்பாக நடைபெற்ற எறிபந்து போட்டிகளில் மாணவர் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் […]
IMG 20240829 WA0002 - பெத்தநாயக்கனூர் பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை...

You May Like