மகாராணி காயத்ரி தேவி கவர்ச்சியான ஐகானாக மட்டும் இல்லாமல், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு அரசியலில் ஈடுபட்டார். 1962 ஆம் ஆண்டு சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார் இதில்,அவர் 1,92,909 வாக்குகள் என்ற மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த 1975 ஆம் ஆண்டு அவசரகால நிலைப்பாட்டின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.6 மாதங்கள் திஹார் சிறையில் கழித்தார்.